Home Featured நாடு 1எம்டிபி விசாரணைக்கு அரசாங்கம் உதவும் – நஜிப் உறுதி!

1எம்டிபி விசாரணைக்கு அரசாங்கம் உதவும் – நஜிப் உறுதி!

443
0
SHARE
Ad

Najib Tun Razakபுத்ராஜெயா- 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு துணை நிற்பதில்
அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி விவகாரம் வெளிப்படையாகவும், அதேசமயம் இலகுவாகவும் கையாளப்படும்
என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

“பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மலேசிய பொருளாதாரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை நிலைத்திருக்கும் வகையில், 1எம்டிபி மீதான நன்மதிப்பை உயர்த்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.”

#TamilSchoolmychoice

“1எம்டிபியுடன் தொடர்புடைய விசாரணை விரைவில் முடிக்கப்பட அரசாங்கம்
நிச்சயமாக உதவும். மேலும் அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதையும்
உறுதி செய்யும்,” என்று பிரதமர் நஜீப் மேலும் தெரிவித்துள்ளார்.