Home Featured நாடு அடுத்த ஆண்டு முதல் மலேசியா – தாய்லாந்து எல்லையில் தடுப்புச்சுவர்!

அடுத்த ஆண்டு முதல் மலேசியா – தாய்லாந்து எல்லையில் தடுப்புச்சுவர்!

637
0
SHARE
Ad

????????????????????????????????????

கோலாலம்பூர்- கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக,
மலேசியா – தாய்லாந்து இடையே எல்லைப் பகுதியில் அடுத்த ஆண்டு சுவர்
எழுப்பப்பட உள்ளது.

இரு தரப்புக்கும் இடையேயான பொது எல்லைக் குழு கூட்டத்தில் இதற்கான
உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல்
பெறப்படும் என்றும் மலேசிய ஆயுதப்படை தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர்
சுல்கிப்ளி முகமட் சின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எல்லைப் பகுதியில் எந்தெந்த இடங்களில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என்பது
அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், சுவர் கட்டுமானம் மற்றும்
பராமரிப்புக்கான செலவுகளை இரு தரப்பும் பகிர்ந்து கொள்ளும் என்றார்.

“கடந்த காலத்தில் எல்லைப் பகுதியில் சுவரோ அல்லது வேலியோ அமைக்கப்பட
வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தால், அது மலேசிய பகுதியிலேயே அமைந்திருக்கும். தாய்லாந்து தனக்கென தனியாக இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கும். ஆனால் தற்போது இருதரப்புக்கும் பொதுவாக ஒற்றைச் சுவர் மட்டுமே எழுப்பப்படுகிறது.

“ரோந்துப் பணியைப் பொறுத்தவரையில், தங்கள் பகுதியை தாய்லாந்தும், மலேசிய
பகுதியை நாமும் கண்காணிப்போம். இது யதார்த்தமான, அதே சமயம் இரு
நாடுகளுக்கும் செலவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு ஏற்பாடு,” என்று சுல்கிப்ளி
முகமட் சின் மேலும் தெரிவித்தார்.