Home Featured தொழில் நுட்பம் ஐஓஎஸ் 9-ன் பதிவிறக்கம் தொடங்கியாச்சு!

ஐஓஎஸ் 9-ன் பதிவிறக்கம் தொடங்கியாச்சு!

613
0
SHARE
Ad

iphoneகோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த படி, நேற்று முதல் ஐஓஎஸ் 9-ன் பதிவிறக்கம் தொடங்கிவிட்டது. கடந்த ஐஓஎஸ் பதிப்பு போல் இல்லாமல், புதிய பதிப்பை எளிமையாக ஆப்பிள் கருவிகளில் மேம்படுத்த முடிகிறது என ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் பரவலாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடம் வெளியான ஐஒஎஸ் 8, 4.6 ஜிபி இருந்ததாகவும், அதன் காரணமாக ஆப்பிள் கருவிகளில் மேம்படுத்துவதற்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஐஓஎஸ் 9 வெறும் 1.4 ஜிபி என்பதால் கடந்த முறை ஏற்பட்ட சிக்கல்கள் தற்போது இருக்காது என நம்பப்படுகிறது.

appleஇருந்தும், ஐஓஎஸ் 9-ஐ மேம்படுத்துவதிலும் சிரமம் இருப்பதாக டுவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகையில், புதிய பதிப்பை ஐட்யூன் வழியாக மேம்படுத்தும் போது எவ்வித இடையூறும் இருக்காது என தெரிவித்துள்ளனர்.