அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான எச்பி, தற்போது கணினி மற்றும் ‘அச்சுப்பொறி’ (Printer) தயாரிப்புப் பிரிவை தனி நிறுவனமாகவும், நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கும் பிரிவை மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் இந்த பணி நிறைவு பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், அந்நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 2 பில்லியன் டாலர்கள் வரை செலவீனங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வருடங்களில், எச்பி 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.