Home தொழில் நுட்பம் ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கிறீர்களா? ஜாக்கிரதை – எச்பி எச்சரிக்கை!  

ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கிறீர்களா? ஜாக்கிரதை – எச்பி எச்சரிக்கை!  

655
0
SHARE
Ad

smartwatchகோலாலம்பூர், ஜூலை 27 – உலகம் எங்கும் திறன்கடிகாரங்கள் எனப்படும் ஸ்மார்ட்வாட்ச்சின் விற்பனை அதிவேகமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த கருவிகள் அனைத்தும் ஹேக்கர்களால் எளிதாக பாதிப்பிற்குள்ளாகக் கூடியவை என தொழில்நுட்ப நிறுவனமான எச்பி (Hewlett-Packard) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்சின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக நடந்த ஆராய்ச்சியில், “இதுவரை ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட ஸ்மார்ட்வாட்சுகளில் 100 சதவீதம் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில், கடவுச் சொற்களை அங்கீகரிக்கும் தன்மை, குறியாக்க முறைகள் (Encryption), தனிப்பட்ட தகவல்கள் பாதுகாத்தல் போன்ற அம்சங்கள் போதிய அளவிற்கு இல்லை”

“இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவிகள் ஹேக்கர்களுக்கு தகவல்களைத் திருட பல்வேறு புதிய வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. ஸ்மார்ட்வாட்ச்களுடன் ‘இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்’ (Internet of Things) தொழில்நுட்ப முறையில் இணைக்கப்பட்டு இருக்கும் மற்ற கருவிகளுக்கும் இந்த சைபர் தாக்குதல் தொடர்கிறது” என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக எச்பி நிறுவனத்தின் தொழில்நுட்ப பாதுகாப்பிற்கான பொது மேலாளர் ஜேசன் ஸ்கிமிட் கூறுகையில், “தற்போதைய மேம்பட்ட ஸ்மார்ட்வாட்ச்கள் மூலம் கார், வீட்டின் கதவுகள் போன்ற பல முக்கிய இடங்கள் மற்றும் பொருட்களை இயக்க முடியும். இதனால் மிக நுட்பமான தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எச்பி நிறுவனம், இந்த ஆராய்ச்சியில் 10 முன்னணி ஸ்மார்ட்வாட்ச் கருவிகளை ஆய்விற்கு உட்படுத்தியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் கார் சாவியாகவும் பயன்படுவதால், எச்பி, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் கருவிகளையும் பாதுகாப்பற்றது என்று கூறுகிறதா? என்பது தெரியவில்லை. உண்மையில், இந்த கருவிகள் பாதுகாப்பற்றது என்றால், எச்பி நேரடியாக எந்தெந்த கருவிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது என்பதை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தினால் பயனர்களுக்கு பேருதவியாக இருக்கும்.