Home உலகம் பாம்புடன் தம்படம் – விபரீதத்தில் முடிந்த அமெரிக்கரின் ஆசை!

பாம்புடன் தம்படம் – விபரீதத்தில் முடிந்த அமெரிக்கரின் ஆசை!

622
0
SHARE
Ad

selfie2கலிஃபோர்னியா, ஜூலை 27 – அமெரிக்காவில் ஆண்டுதோறும் 7000-8000 பேர் பாம்புகடிக்கு ஆளாகின்றனர். அதிலும், அதிக விஷயமுடைய ‘ரேட்டில்ஸ்னேக்’ (Rattle Snake) எனப்படும் விரியன் பாம்புகளால் கடிபட்டவர்கள் தான் அதிகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தாலும், இந்த பாம்புகளின் தாக்குதல் ஏதோ வகையில் மனிதர்களின் உடலில் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு கொடூரமான இந்த பாம்புடன் அமெரிக்கர் ஒருவர் தம்படம் (Selfie) எடுக்க முயன்று பெரும் விபரீதத்தை சந்தித்துள்ளார்.

டாட் பாஸ்லர் என்ற அந்த அமெரிக்கர், ஒருவருட காலமாக வளர்த்து வந்த விரியன் பாம்புடன் தம்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாம்புடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அவ்வளவுதான், அதனை வெளியில் எடுத்த அடுத்த நொடி, பாம்பு, பாஸ்லரின் கையை பதம் பார்த்தது.

உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவழியாக, பாஸ்லர் ஆபத்துக்கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தார். இருந்தும், பாம்பு கடித்ததால், அவரின் கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, 153,161 டாலர்களை மருத்துவக் கட்டணமாக கட்டுமாறு அவரை வலியுறுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

“பாம்பு கடித்த சமயத்தில் என் நாக்கு வெளியே துருத்துவதைப் போல் உணர்ந்தேன். ஒட்டுமொத்தமாக என் உடல் முழுவதும் அந்த சமயத்தில் செயல் இழந்துவிட்டது. தற்போது அந்த பாம்பை வனப்பகுதி ஒன்றில் விட்டுள்ளேன். எனினும், பாம்பு கடியை விட மருத்துவக் கட்டணம் தான் தாங்க முடியாத வலியைத் தருகிறது” என்று  டாட் பாஸ்லர் தெரிவித்துள்ளார்.