Home தொழில் நுட்பம் திறன்கடிகாரங்களில் செல்லியல் தமிழ்ச் செய்தி!

திறன்கடிகாரங்களில் செல்லியல் தமிழ்ச் செய்தி!

687
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவம்பர் 18 –  திறன்பேசிகளில், தமிழ் செய்திகளை செயலி மூலமாக உடனுக்குடன் கொடுத்து வரும் செல்லியல் தகவல் ஊடகத்தின் செய்திகளை  தற்போது அண்டிராய்டு திறன் கைக்கடிகாரங்களிலும் படித்து மகிழலாம் .

திறன்பேசிகளின் உள்ளடக்கங்களைத் தாங்கிய அணிகலன்கள் தற்போது சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைவரையும் உடனடியாகக் கவர்ந்து, நிறுவனங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் முக்கிய அணிகலனாக கைக்கெடிகாரங்கள் (திறன்கடிகாரங்கள்)  தற்போது உருவெடுத்துள்ளன.

எல்ஜி நிறுவனம் (LG) அண்மையில் வெளியிட்ட அண்டிராய்டு இயங்குதளத்துடன் கூடிய எல்ஜி ஜி திறன் கடிகாரத்தில் செல்லியலைப் பதிவிறக்கம் செய்து செய்திகளை மிக எளிதாகப் படிக்கலாம்.

#TamilSchoolmychoice

திறன்பேசிகளில் வரும் செல்லியல் செய்திகள் அனைத்தும், எல்ஜி திறன் கைக்கடிகாரத்திலும் வெளிவருகின்றன .

LG G

(எல்ஜி ஜி திறன்கடிகாரத்தில் காணப்படும் செல்லியல் செய்தி) 

இது குறித்து செல்லியல் செயலியின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கூறுகையில், “அண்மையில், தொழில் தொடர்பாக ஹாங்காங் சென்றிருந்தபோது, அங்கு எல்ஜி திறன் கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கினேன். எனது திறன்பேசியில் செல்லியல் செய்திக்குறிப்பு கிடைக்கப்பெற்ற அதே வேளையில், எனது புதிய எல்ஜி ஜி திறன் கடிகாரத்திலும் செல்லியலின் செய்திக்குறிப்புகளை உடனுக்குடன் தமிழில் கிடைக்கப்பெற்றேன். புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களிலும் தமிழைச்  சேர்க்க செல்லியல் தொடர்ந்து தனது சேவையைத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.