Home இந்தியா உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரணாப் முகர்ஜி!

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரணாப் முகர்ஜி!

397
0
SHARE
Ad

tallest-Krishna-temple1உத்தரப் பிரதேசம், நவம்பர் 18 – உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில் உத்தரப் பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டினார்.

பெங்களூரைச் சேர்ந்த “இஸ்கான்’ அமைப்பினர் சார்பில் அந்தக் கோயில் கட்டப்படவுள்ளது. கோயிலுக்கு “பிருந்தாவன் சந்திரோதய மந்திர்’ என்று அந்த அமைப்பினர் பெயர் சூட்டியுள்ளனர்.

ரூ.300 கோடி செலவில் 210 மீட்டர் உயரத்துக்கு இக்கோயில் கட்டப்படவுள்ளது. இது டெல்லியில் 72.5 மீட்டர் உயரம் கொண்ட குதுப்மினாரை விட உயரமானது. இக்கோயிலை, கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

விழாவில் சிறப்பு அழைப்பாளராக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “பிருந்தாவனத்தை ஆன்மிகச் சுற்றுலாத் தலமாக்க மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்”.

Krishna-temple-vrindavan-1“இங்கு கோயில் அமைக்கும் இத்திட்டம், அரசின் திட்டங்களுக்கு புதிய கோணத்தை கொடுக்கும். மேலும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரம் மேம்பட இது வழிவகுக்கும்”.

“மேலும் அந்த அமைப்பு பிருந்தாவனப் பகுதியில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புப் பணிகள், கணவரை இழந்த பெண்கள் நலன் உள்ளிட்ட திட்டங்கள், பழமைவாய்ந்த பகுதியில் மேற்கொள்ள சீரமைப்புப் பணிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.