அது என்ன 3டி டச்? என்று கேட்கத் தோன்றும். செல்பேசிகளில் முதல்முறையாக ஆப்பிள் தான் இந்த 3டி டச் எனப்படும் 3டி தொடுதிரை வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பயனர்கள் தங்கள் ஐபோன் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஹோம் ஸ்க்ரீனிலே (முகப்பு திரையில்) செய்து கொள்ளும் வசதி தான் இந்த 3டி டச். திரையில் பயனர்கள் பொத்தான்களுக்கு கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப இயக்கங்கள் இருக்கும்.
ஆப்பிளின் செயலிகளில் மட்டும் இருந்து வந்த இந்த அம்சத்தை, முதன் முதலில் இன்ஸ்டாகிராம் (Instagram) ஏற்றுக் கொண்டு மேம்படுத்தியது. தற்போது பேஸ்புக் மற்றும் வாட்சாப் செயலிகளும் இதனை மேம்படுத்தி உள்ளன. இதன் மூலம் ஐஓஎஸ் 9 கருவிகளில், இந்த செயலிகளை இயக்குவது மிக மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது.