Home உலகம் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது தவறு – நோபல் குழுவின் முன்னாள் செயலர் ஆவேசம்!

ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது தவறு – நோபல் குழுவின் முன்னாள் செயலர் ஆவேசம்!

858
0
SHARE
Ad

obamaநியூ யார்க் – கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு நார்வே நோபல் பரிசுக் குழு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. இது அப்போது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அமெரிக்க அதிபர் என்பதற்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டதாக பலர் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், நோபல் பரிசுக் குழுவின் முன்னாள் செயலர் ஜையில் லுண்டெஸ்டாட் கூறுகையில், “ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என எங்கள் குழு ஒருமனதாக முடிவு செய்து மிகப் பெரிய தவறு இழைத்துவிட்டது.”

“நோபல் பரிசு வழங்கினால், ஒபாமாவின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இருக்கும் என நம்பினோம். அவரது பிரச்சாரத்தில் கூறியபடி, அணு ஆயுதக் குறைப்பு செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.