Home கலை உலகம் நடிகர் கிருஷ்ணா மீது மனைவி வரதட்சணை புகார்: அவர் எந்நேரமும் கைதாகலாம்!

நடிகர் கிருஷ்ணா மீது மனைவி வரதட்சணை புகார்: அவர் எந்நேரமும் கைதாகலாம்!

509
0
SHARE
Ad

1442503290krishna wifeசென்னை – பிரபல திரைப்பட நடிகர் கிருஷ்ணா மீது அவரது மனைவி வரதட்சணைப் புகார் கொடுத்திருப்பதால், அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அலிபாபா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கிருஷ்ணா. கழுகு,யாமிருக்கப் பயமே, யட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியாவார்.

இவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஹேமலதா என்பவரை முகநூல் மூலமாகக் காதலித்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

திருமணமான ஓரிரு மாதங்களிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

இந்நிலையில் ஹேமலதா, நடிகர் கிருஷ்ணா தனது தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுத் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

மேலும், பிரபல நடிகையுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடித்துத் துன்புறுத்துவதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். அவரது புகாரினைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை ஒழிப்புத் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், முன் பிணை கேட்டு நடிகர் கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே,எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.