Home உலகம் இலங்கையில் போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: இலங்கை அரசு தகவல்!

இலங்கையில் போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: இலங்கை அரசு தகவல்!

649
0
SHARE
Ad

01கொழும்பு – இலங்கை அரசு மீதான போர்க்குற்றப் புகார் தொடர்பான உள்நாட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்விசாரணை தொடங்கும் என்றும், பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் இந்த விசாரணை நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உள்நாட்டு விசாரணை தொடர்பாக அக்டோபர் மாதம்  நான்கு அம்சத் திட்டம் வகுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice