Home கலை உலகம் இயக்குநர் பாண்டிராஜ்- விஷால் இணையும் ‘கதகளி’ படம் இன்று தொடங்கியது!

இயக்குநர் பாண்டிராஜ்- விஷால் இணையும் ‘கதகளி’ படம் இன்று தொடங்கியது!

599
0
SHARE
Ad

NTLRG_150918073915000000சென்னை- நடிகர் விஷால் பாயும் புலி படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார்.

இம்முறை அவர் இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணைகிறார். இப்படத்திற்குக் ‘கதகளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து அதிரடி மற்றும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது.

#TamilSchoolmychoice

விஷாலின் சொந்தப் பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த கேதரைன் தெரசா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமானது.

விஷால் – கேதரைன் தெரசா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.