Home இந்தியா நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு!

602
0
SHARE
Ad

seemanராமநாதபுரம் – 2016 எப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: “நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை.

#TamilSchoolmychoice

தொகுதி வாரியாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களை அறிவித்து விடுவோம்.

அச்சுறுத்தலுக்கு அடி பணியாத மற்ற கட்சிகளுக்கு விலை போகாத வேட்பாளர்களை அறிவிப்போம்.

எங்களது இலக்கு வெற்றி தோல்வி கிடையாது; பண நாயகத்தை ஒழிக்க வேண்டும் எனபதேயாகும்” என்று அவர் கூறியுள்ளார்.