Home Featured உலகம் இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா!

இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா!

1003
0
SHARE
Ad

Maithripala-Sirisena4கொழும்பு – இலங்கை போர் குற்றங்கள் மீதான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில், போர் குற்றங்களும், மனித உரிமை மீறலும் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை பின்பற்றி, அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது.

#TamilSchoolmychoice

இதனை ஏற்க மறுத்த இலங்கை அரசு, உள்நாட்டிலேயே நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்துவோம் என உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ‘உள்நாட்டில் விசாரணை நடைபெற்றால் உரிய நீதி கிடைக்காது’, என ஐ.நா மனித உரிமைக்குழு தலைவர் சையது ராத் அல் ஹசன் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துலக பத்திரிகையாளர் சந்திப்பில், இலங்கை அதிபர் சிறிசேனா கூறுகையில், ‘போர் குற்றங்கள் பற்றி மேற்கொள்ள உள்ள விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறியிருந்தார்.

சிறிசேனாவின் இந்த அறிவிப்பு, அனைத்துலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதிபர் சிறிசேனா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், கடலோர சுற்றுலா நகரமான வாட்டுவாவில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அதிபர் சிறிசேனா பேசுகையில், ‘‘போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பாக ஐ.நா உத்தரவுப்படி, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு எந்த வகையிலான விசாரணையும் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

உள்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நிர்வாகிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது’’ என்றார்.