Home கலை உலகம் நடிகர் கிருஷ்ணா இயக்கத்தில் முதன் முறையாக விளம்பரப் படத்தில் நடிக்கிறார் கமல்!

நடிகர் கிருஷ்ணா இயக்கத்தில் முதன் முறையாக விளம்பரப் படத்தில் நடிக்கிறார் கமல்!

594
0
SHARE
Ad

kamaசென்னை –கமல்ஹாசன் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி முதலிய மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை விளம்பரப் படங்களில் நடித்ததில்லை.விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்: வர்த்தக விளம்பரத்தில் நடித்ததில்லை.

இன்றைக்கு விளம்பரப் படங்களில் நடிக்காத நடிகர்களே இல்லை; விளையாட்டு வீரர்களோ இல்லை; ரஜினி, கமல் தவிர!

அஜீத், விஜய் கூட சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட காலமாக விளம்பரப்படங்களில் நடிக்காமல் இருந்த சரத்குமார், ராஜ்கிரண் கூட விளமபரப்படங்களில் நடித்துவிட்டார்கள்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கமல்ஹாசன் தற்போது முதன் முறையாக ஜவுளிக் கடை வர்த்தக விளம்பரப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விளம்பரப் படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?

வரதட்சணைப் புகாரில் சிக்கித் திண்டாடி வரும் நடிகர் கிருஷ்ணா தான் இந்த விளம்பரப் படத்தை இயக்கவிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து கமலுக்கு ஏனிந்த  மனமாற்றம் என்று தெரியவில்லை!