Home உலகம் நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமல்!

நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமல்!

629
0
SHARE
Ad

n1_2555254gகாட்மாண்டு – உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

நேபாளத்தில் 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

2006-ஆம் ஆண்டில் அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேசிய அரசியலில் இணைந்தனர். அதன்பின்பு 2008-ஆம் ஆண்டு 240 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து புதிய அரசியல் சாசனத்தை வரையறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் புதிய அரசியல் சாசனத்தை வரையறுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், ஏறக்குறைய10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தில் கடந்த 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்தப் புதிய அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு பிரிவு மீதும் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒருமனதாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு அதிபர் ராம்பரன் யாதவ் அறிவித்தார்.

நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும், மதச்சாற்பற்ற நாடாக நேபாளம் இருக்கும் என்று இந்தப் புதிய அரசியல் சாசனம் கூறுகிறது.

இந்தச் சாசனத்தின் அடிப்படையில் கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு நேபாளம் 7 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் புதிய எல்லைகள் வகுக்கப்படும். ஒட்டு மொத்த அதிகாரங்கள், மத்திய அரசின் வசம் இருந்தாலும், மற்ற அதிகாரங்கள், மாகாண அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.