புதுடில்லி – குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் இணையதளங்களைக் கட்டுப்படுத்தவும், இணைவழிக் குற்றங்களை முறியடிக்கவும் அதிநவீன அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களைத் தயாரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த நிபுணர் குழு தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையையின் அடிப்படையில், Indian cyber crime co ordination (இந்திய இணையக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்- ஐசி4) என்ற பெயரில் ஓர் அமைப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த அமைப்பு, ஆபாச இணையதளங்களையும், சைபர் குற்றங்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்.