Home Featured நாடு கெவின் மொராயிஸ் கொலை: சந்தேக நபர்களில் ஒருவர் கைது!

கெவின் மொராயிஸ் கொலை: சந்தேக நபர்களில் ஒருவர் கைது!

787
0
SHARE
Ad

maraisjpg1கோலாலம்பூர் – அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலையில் தேடப்பட்டு வந்த இருவரில் ஒரு நபரை நேற்று இரவு காவல்துறை பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்தது.

பாதுகாவலரான விஸ்வநாத் முருகையாவை (வயது 25) நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மொராயிஸ் கொலை வழக்கில் விசாரணைக்காக தேடப்பட்டு வந்த விஸ்வநாத் மற்றும் தினிஸ்வரன் ராமன் என்ற இருவரின் படங்களை கடந்த சனிக்கிழமை காவல்துறை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

தற்போது விஸ்வநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபரான தினிஸ்வரன் குறித்து ஏதேணும் தகவல் தெரிந்தால், செந்துல் காவல்துறை தலைமையகத்தின் 03-40482222 தொலைப்பேசி எண் அல்லது விசாரணை அதிகாரி வான் அப்துல்லா வான் சைட்டின் 012-3482737 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் காவல்துறையால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.