Home இந்தியா நரபலி சந்தேகம் வலுவாகிறது: மதுரை கிரானைட் குவாரியில் மேலும் ஓர் எலும்புக்கூடு சிக்கியது!

நரபலி சந்தேகம் வலுவாகிறது: மதுரை கிரானைட் குவாரியில் மேலும் ஓர் எலும்புக்கூடு சிக்கியது!

673
0
SHARE
Ad

skull_2555260fமதுரை – பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரியில், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் 12 பேரைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்து நரபலி கொடுத்துப் புதைத்து விட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கிரானைட் குவாரிக்கு அருகிலுள்ள இடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் 6 எலும்புக் கூடுகள் கிடைத்தன.

இந்நிலையில் நேற்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.இதன்மூலம் மொத்தம் 7 எலும்புக் கூடுகள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றில், ஒரு உடல் தவிர, 6 உடல்களின் மண்டை ஓடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த இடத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்கள்தான் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

#TamilSchoolmychoice

மீதிப் பேரின் எலும்புக் கூடுகள் என்னவாயின எனத் தெரியவில்லை.இந்நிலையில், இடுகாட்டில் தொடர்ந்து தோண்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டியன் எதிர்ப்புத் தெரிவித்ததால் நேற்றுடன் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.