Home இந்தியா மதுரையின் பிரபல ரெளடி அட்டாக் பாண்டி மும்பையில் கைது!

மதுரையின் பிரபல ரெளடி அட்டாக் பாண்டி மும்பையில் கைது!

567
0
SHARE
Ad

BLINK-1235மும்பை – பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி மும்பையில் வசி என்ற இடத்தில் வைத்துத் மதுரை குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலை, ஆள்கடத்தல், நில அபகரிப்புப் புகார் என மொத்தம் 20 வழக்குகளில் தேடப்பட்டவர். இவற்றின் சில வழக்குகளில் இருந்து முன் பிணை பெற்றிருந்தாலும் மற்ற வழக்குகளில் கைது செய்யப்படமாம் என்பதால் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார்.

மேலும், இவர் திமுக ஆட்சிக் காலத்தில் மு.க அழகிரிக்கு நெருங்கிய நண்பராகவும், மதுரை வேளாண் துறைத் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இவரை மும்பையில் பேலாப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்