Home இந்தியா அட்டாக் பாண்டி வெறும் அம்பு தானா? எய்தவர் யார்? விசாரணை இறுகுகிறது!

அட்டாக் பாண்டி வெறும் அம்பு தானா? எய்தவர் யார்? விசாரணை இறுகுகிறது!

634
0
SHARE
Ad

30-1443589445-attack-pandi54மதுரை – பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை  மேலும் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்கக் காவல்துறையினருக்கு மதுரை குற்றவியல் நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

அட்டாக் பாண்டியை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து 18 பக்க அளவிற்குக் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

எனினும், காவல்துறை எதிர்பார்க்கும் தகவல் இன்னும் அட்டாக் பாண்டியிடமிருந்து வரவில்லை என்பதால், மேலும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிக் காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

பொட்டு சுரேஷ் கொலைக்கு ஒரு மாதத்திற்கு முன் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோரை அட்டாக் பாண்டி சந்தித்துள்ளார். அப்போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த முழு தகவல்களையும் அட்டாக் பாண்டி வெளியிடவில்லை.

மேலும், அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்த காலத்தில் 3 ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார். அந்த வங்கிக் கணக்குகளில் பல லட்சம் ரூபாய் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.எனவே, இவையெல்லாவற்றையும் பற்றி விசாரிக்க மேலும் நான்கு நாட்கள் அனுமதிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் தமது மனுவில் கோரியிருந்தனர்.

இம்மனு, மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பால் பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அட்டாக் பாண்டி தரப்பு வழக்கறிஞர், அட்டாக் பாண்டி அனைத்துத் தகவல்களையும் காவல்துறையினரிடம் கூறிவிட்டதாகவும், கடைசியாக அவர் யார்? யாரை சந்தித்ததாக கூறினாரோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி காவல்துறையினர் விசாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அட்டாக் பாண்டியை மேலும் இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அழகிரி குடும்பத்தினர், பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உட்பட பலரது நடவடிக்கைகளை முழுமையாக அறிந்தவர் அப்போதைய உதவி ஆணையர் குமாரவேல். அவர் தற்போது கூடுதல் எஸ்பியாக திருநெல்வேலி குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றுகிறார்.

அவர் மதுரையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய அனுபவமும் விசாரணைத் திறமையையும் பெற்றவர் என்பதால், இந்த விசாரணையை மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்.