Home இந்தியா பலத்த பாதுகாப்புடன் அட்டாக் பாண்டி மும்பையிலிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்!

பலத்த பாதுகாப்புடன் அட்டாக் பாண்டி மும்பையிலிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்!

610
0
SHARE
Ad

adமதுரை – மு.க.அழகிரியின் வலதுகரம் போன்று செயல்பட்ட பொட்டு சுரே‌ஷ் கொலை வழக்கில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத் தலைமறைவாக இருந்த பிரபல ரெளடி அட்டாக் பாண்டி மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து யாரும் அறியாத வண்ணம் காவல்துறையினர் அவரைப் பின் பக்க வாசல் வழியாக மதுரை சுப்புரமணியபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு தனி அறையில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரைக் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று அவரது மனைவி தயாளு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆகையால், விசாரணை முடிந்ததும் அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.