Home இந்தியா பயனர்கள் கடும் எதிர்ப்பு: வாட்ஸ் அப் கண்காணிப்புத் திட்டம் கைவிடப்பட்டது!

பயனர்கள் கடும் எதிர்ப்பு: வாட்ஸ் அப் கண்காணிப்புத் திட்டம் கைவிடப்பட்டது!

587
0
SHARE
Ad

whatsapp-blue-tick-featuredபுதுடில்லி- வாட்ஸ்அப் தகவல்களைக் கண்காணிக்க மத்திய அரசு கொண்டு வந்த வரைவுத் திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பால் உடனடியாகக் கைவிடப்பட்டுள்ளது.

தந்தி போல் வாட்ஸ்அப்பில் உடனுக்குடன் தகவல்கள், குரல் பதிவுச் செய்தி, காணொளி முதலியவற்றை அனுப்பி வைக்க முடியும் என்பதால் இது உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது.

உடனுக்குடன் தகவல் பரிமாற்றத்திற்கு வசதியாக இருப்பதால் நல்லதோ கெட்டதோ அவை நொடிப் பொழுதில் பலருக்கும் பரவி விடுகிறது.இதன் காரணமாக இது சில குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.

#TamilSchoolmychoice

எனவே, வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் அனைத்துத் தகவல்களையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஒழுங்குப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கென புதிய வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டது.

இந்தத் திட்டவரைவின்படி வாட்ஸ் அப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் போன்ற சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்துச் செய்திகளையும், புகைப்படங்கள், காணொளிகள், உரையாடல்கள் உட்பட அனைத்தையும் கண்டிப்பாக 90 நாட்களுக்குச் சேமித்து வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விசாரணைக்காக அரசு கேட்கும் பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்குத் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் பயனாளர்களின் தகவல்களைச் சேமித்து வைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மத்தியஅரசின் இத்தகைய தீர்மானத்திற்கு வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது நட்பு ஊடகங்களில் இதனை எதிர்த்துப் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன.

இதனால் மத்திய அரசு வாட்ஸ் அப்பிற்கு விதிக்கவிருந்த கட்டுப்பாடுகளை உடனடியாகக் கைவிட்டுள்ளது.