கோலாலம்பூர் – மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன்.. தான் வகிக்கும் பதவிக்குத் தகுந்தாற்போல் எப்போதும், துடிப்போடும், துறுதுறுப்பாகவும் இருக்கும் அவர், விளையாட்டுத் துறையில் கால்பதிக்கும் இளைஞர்களுக்கு சரியான முன்னுதாரணமாக விளங்கி வருகின்றார்.
மலேசியாவில் நடக்கும் உடற்பயிற்சி கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் குறும்படங்கள் என அனைத்திலும் கைரி ஜமாலுதீனைப் பார்க்கலாம். அந்த அளவிற்கு தனது துறையில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், உலகின் மிகப் பிரபல ஆண்களின் உடல்நலம் குறித்த இதழான ‘மென்ஸ் ஹெல்த்’ மலேசியப் பதிப்பின் அட்டைப் படத்தை கைரி அலங்கரிக்கவுள்ளார்.
இவ்வாண்டு அக்டோபர் 10-ம் தேதி, நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மலேசியப் பதிப்பான ‘மென்ஸ் ஹெல்த்’ தனது அக்டோபர் மாத இதழின் அட்டைப் படத்திற்கு கைரியை மாடலாக்கி அழகு பார்த்துள்ளது.
தகவல்: Malaysiandigest
தொகுப்பு: செல்லியல்