Home கலை உலகம் தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: சிறந்த மற்றும் பிரபல நடிகர் பட்டியலில் அஜித் முதலிடம்!

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: சிறந்த மற்றும் பிரபல நடிகர் பட்டியலில் அஜித் முதலிடம்!

931
0
SHARE
Ad

 

 

jai1_jpg_1600159gசென்னை- தந்தி செய்தித் தொலைக்காட்சி அண்மையில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், பிரபல மற்றும் சிறந்த நடிகராக அஜித் முதலிடம் பிடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழ்ச் சினிமாவில் 1990 களில் அறிமுகமான நடிகர்களில் சிறந்த நடிகர் யார்? என்று ஒரு கேள்வியும், உங்கள் அபிமான நடிகர் யார்? என்ற கேள்வியும் பெரும்பாலான பொதுமக்களிடம் கேட்கப்பட்டன.

சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அஜித் என 24 சதவீதம் பேரும் , விக்ரம் என 23 சதவீதம் பேரும், விஜய், சூர்யா என 18 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்

அதுபோல் பிரபல நடிகர் யார் என்ற கேள்விக்கு நடிகர் அஜித் என 30  சதவீதம் பேரும் , நடிகர் விஜய் என 27 சதவீதம் பேரும், சூர்யா என 18 சதவீதம் பேரும், விக்ரம் என  16 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். உள்ளனர்.

சிறந்த நடிகர் மற்றும் பிரபலமான நடிகர் இரண்டிலுமே அஜித் முதலிடம் பிடித்து ‘தல’ என்பதை நிரூபித்துள்ளார்.