Home Featured நாடு அனினா வழக்கை எதிர்த்து நஜிப் தரப்பில் நாளை மனுத்தாக்கல்!

அனினா வழக்கை எதிர்த்து நஜிப் தரப்பில் நாளை மனுத்தாக்கல்!

790
0
SHARE
Ad

Aninaகோலாலம்பூர் – எதிர்வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள், லங்காவி அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின் வழக்கை எதிர்த்து, தற்காப்பு மனுவை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோ நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோர் தாக்கல் செய்ய வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், கடந்த வெள்ளிக்கிழமை நஜிப்பின் சொத்துகளை முடக்கும் படி அனினா தாக்கல் செய்த மனுவிற்கு, வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள், நஜிப்பும், அப்துல் ராவுப்பும் தங்களது வாக்குமூலங்களை பதிலாக அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து, நாளை நஜிப்பும், ராவுப்பும் தங்களது சார்பில் எதிர் மனுக்களை சமர்ப்பிப்பார்கள் என அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.