Home Featured நாடு கெவின் மொராயிஸ் படுகொலை: மேலும் இருவர் கைது!

கெவின் மொராயிஸ் படுகொலை: மேலும் இருவர் கைது!

503
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் படுகொலை தொடர்பில் மேலும் இருவரை வியாழக்கிழமையன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Kevin Moraisகோலாலம்பூர், ஜிஞ்சாங்கில் உள்ள ஓர் உணவு அங்காடித் தொகுதிக்கு (food court) அருகில் உள்ள ஒரு கார் கழுவும் மையத்திலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் அந்த இருவரும் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் டத்தோ சைனுடின் அஹ்மாட் தெரிவித்தார்

“அந்த இருவரில் ஒருவர் தஞ்சோங் மாலிம் நகரில் மின்கம்பி இணைப்பு குத்தகையாளர். மற்றொருவர் பெட்டாலிங் ஜெயாவில் உயிரியல் மருத்துவத்துறை தொழில் நுட்ப (பையோமெடிக்கல்) பணியாளர் ஆவார். ஆக இதுவரை மொராயிஸ் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது” என்றும் சைனுடின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்த வழக்கைத் துப்பறிந்து வரும் காவல் துறை புலனாய்வுக் குழு, யுஎஸ்ஜே-1, பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் மேல்மாடிக்குச் சென்று, அங்கு இந்த வழக்கில் தொடர்புடைய பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காவல் துறையினர் 52 வயது மருத்துவர் ஒருவர் உட்பட நான்கு பேரை இதுவரை மொராயிஸ் கொலை தொடர்பில் கைது செய்துள்ளனர்.