கொல்கத்தா – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை, மேற்கு வங்க அரசு நேற்று பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததுள்ளது. இந்நிலையில், அந்த ஆவணங்கள் மூலம் நேதாஜியின் மர்மமான இறப்புக்கு குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர், 1945-ல் நடந்த விமான விபத்தில் பலியாக வில்லை என்று அந்த ஆவணங்களில் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளது.
நேதாஜி இறந்ததாகக் கருதப்படும், 1945ம் ஆண்டுக்கு பிறகு, 1948-ல், அப்போதைய தகவல் துறை அதிகாரி ஒருவர், நேதாஜியின் உறவினர் அமியா என்பவருக்கு எழுதி உள்ள கடிதத்தில், “விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், சுவிட்சர்லாந்து நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர், 1949-ல், நேதாஜியின் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், “நேதாஜி உயிருடன் இருக்கிறார் என, 1946-ல், தன்னிடம் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களும் நேற்று வெளியிடப்பட்ட தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நேதாஜியின் குடும்பத்தினரை 20 வருடங்களாக காங்கிரஸ் உளவு பார்த்த அதிர்ச்சித் தகவலும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த 20 வருடங்களில் காங்கிரஸ் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய பிரதமர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.