Home இந்தியா “மதிமுக தலைவர்களின் கட்சி அல்ல தொண்டர்களின் கட்சி”: வைகோ

“மதிமுக தலைவர்களின் கட்சி அல்ல தொண்டர்களின் கட்சி”: வைகோ

572
0
SHARE
Ad

vaiko mamallapuram01சென்னை – மதிமுக-வை விட்டு முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுகவிற்கு தாவிக்கொண்டிருக்கும் நிலையில், மாமல்லபுரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகோவிடம், மதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவிற்கு தாவி வருவது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு வைகோ கூறியிருப்பதாவது:-

“தேம்ஸ் நதிக்கரையில் லண்டன் மாநகரை வீழ்த்துவதற்கு படைகள் முற்பட்டு வந்து கொண்டிருக்கும்போது, லண்டன் மக்கள் ஒன்று திரண்டு நின்றார்கள், வென்றார்கள். மதிமுக அதுபோன்று வெல்லும்.  எத்தனையோ பேர் மதிமுக-விற்கு வரலாம், போகலாம். இது தலைவர்கள் கட்சியல்ல. தொண்டர்களின் கட்சி.”

#TamilSchoolmychoice

“18.10.1993-ல் விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி என் மீது கொலை பழிசுமத்தி என்னை திமுகவில் இருந்து வெளியேற்றிய போது, தீக்கங்குகளால் உயிர்நீத்த ஐந்து தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இது. வைகோவால் உருவான கட்சி இல்லை. எத்தனை தலைவர்கள் வேண்டுமானாலும் போகலாம். ஆனால், தொண்டர்கள் போக மாட்டார்கள். அவர்கள் போவதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.”

“ எம்எல்ஏக்களாகவும் (சட்டமன்ற உறுப்பினர்), அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்கள், பதவிக்கு ஆசைப்படுபவர்கள், பதவி வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்சியை விட்டு போகிறார்கள். கட்சியை விட்டு தொண்டர்கள் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியின் போது பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.