Home Featured இந்தியா ஹவுரா- செகந்திராபாத் விரைவு ரயிலில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: பயணிகள் அலறல்!

ஹவுரா- செகந்திராபாத் விரைவு ரயிலில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: பயணிகள் அலறல்!

577
0
SHARE
Ad

23-1442981463-train-new-21-600கொல்கத்தா- ஹவுராவிலிருந்து செகந்திராபாத் செல்லும் ஃபலக்னுமா விரைவு ரயிலில் இன்று காலை வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபலக்னுமா ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக இன்று காலை மர்மத் தகவல் வந்தது. உடனே வெடிகுண்டு நிபுணர்களைத் தகவல் கொடுத்து வரவழைத்த ரயில்வே காவல்துறையினர் மேற்கு வங்கம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஃபலக்னுமா ரயிலில் ஏறிச் சோதனை நடத்தினர்.

தீவிர சோதனையில் பயணிகள் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இதனால் ஹவுரா – செகந்திராபாத் ஃபலக்னுமா விரைவு ரயில் பயணிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள்.

#TamilSchoolmychoice

வெடிகுண்டினைக் கைப்பற்றிய வெடிகுண்டு நிபுணர்கள் அது குறித்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மேற்குவங்க ரயில் நிலையம் கிட்டத்தட்ட ஒரூ மணி நேர்த்திற்கும் மேலாகப் பதற்றமும் பரபரப்புமாகக் காணப்பட்டது.

வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதால் பயணிகள் நிம்மதியாகப் பயணம் மேற்கொண்டனர்.