கடந்த 2010-ல் வெளியிடப்பட்ட இன்ஸ்டாகிராம், கடந்த மூன்று வருடங்களில் தான் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் வளர்ச்சி, மற்ற நட்பு ஊடகங்களான டுவிட்டர் மற்றும் ஸ்நாப்சேட்டை ஒப்பிடுகையில் அபாரமாக உள்ளது.
அமெரிக்காவை தாண்டி, இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி, ஐரோப்பிய நாடுகளிலும் ஆசியாவில் பிரேசில், ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் குறிப்பிடும் படி உள்ளது.
இது பற்றி இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 வருடங்களில் 400 மில்லியன் பயனர்களை அடைந்துள்ளது கனவு போன்று உள்ளது. எங்கள் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் எங்களின் முயற்சி தொடரும்” என்று தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் இந்த வளர்ச்சியை மற்றொரு நட்பு ஊடகமான பேஸ்புக் கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், கடந்த 2012-ல் தான் பேஸ்புக், 1 பில்லியன் டாலர்களுக்கு இன்ஸ்டாகிராமை வாங்கியது. அதேபோல் மற்றொரு நட்பு ஊடகமான வாட்சாப்பும் பேஸ்புக்கிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.