Home Featured நாடு மலேசிய நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேனா? மறுக்கிறார் ஜமால் யூனுஸ்

மலேசிய நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேனா? மறுக்கிறார் ஜமால் யூனுஸ்

612
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர்- தாம் போதை மருந்து உட்கொண்டதாகவும், மலேசிய நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் எழுந்துள்ள புகாரை அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அண்மையில் நடந்த சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னணியில் நின்று ஏற்பாடு செய்தவர்களின் ஜமால் யூனுசும் ஒருவராவார்.

சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் சிலர் கூறுவதுபோல் இத்தகைய நடவடிக்கைகளுடன் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இது பொறுப்பற்ற செயல். ஒரு நடிகையுடன் என்னை எதிர்மறையாக தொடர்புபடுத்துவதை கண்டிக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்தபோது, பாலியல் பலாத்காரம் குறித்த குற்றச்சாட்டை அக்குறிப்பிட்ட நடிகை கூறவில்லை. அது என்னைத் தொடர்புபடுத்தி வேறு சிலர் வெளியிட்ட அறிக்கை. எனவே அந்த நடிகையை அழைத்து விளக்கம் கேட்கலாம்,” என்று ஜமால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

கேளிக்கைத் துறையைச் சார்ந்த வர்த்தகர் என்ற வகையில் அக்குறிப்பிட்ட நடிகையை தமக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் கேளிக்கைத் துறை சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருவதால் தம்மையும் பல கலைஞர்களுக்குத் தெரியும் என்றார்.

“அந்த நடிகையை எனக்குத் தெரியும். மேலும் பல நடிகர், நடிகைகளையும் அறிவேன். சித்தி நுர்ஹாலிசா உள்ளிட்ட அனைவரையும் நான் சந்தித்துள்ளேன். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் அவதூறுகள் தொடர்பில் 17 முறை காவல்துறையில் முறையிட்டுள்ளேன். எனவே தற்போதைய எனது விளக்கத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட வேண்டாம்” என்று ஜமால் யூனுஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.