Home கலை உலகம் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு: மராட்டிய ஆளுநர் நிராகரிப்பு!

சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு: மராட்டிய ஆளுநர் நிராகரிப்பு!

547
0
SHARE
Ad

bc24bb9a5012f36e807211768339-grandeமும்பை – மும்பை தொடர் குண்டுவெடிப்பின் போது ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய்தத் தன்னுடைய சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவை மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்க மறுத்துத் தள்ளுபடி செய்தார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில்  257 பேர் உயிரிழந்தனர்.; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதலின் போது  நடிகர் சஞ்சய் தத் தனது வீட்டில்  ஏ.கே. 56, மற்றும் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால் அவர் சிறையில் இருந்ததை விட பரோலில் வெளியே இருந்தது தான் அதிகம்.அவர் அடிக்கடி பரோலில் வெளியே வருவது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் சஞ்சய் தத்துக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. மேலும், கடந்த 201-ஆம் ஆண்டு முன்னாள் உச்சமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று மராட்டிய மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதனை ஏற்க மறுத்து, அவர் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார்.