Home Featured உலகம் மெக்கா கூட்ட நெரிசல் உயிரிழப்பு 350 ஆனது; இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை- ஹஜ் கமிட்டி தகவல்!

மெக்கா கூட்ட நெரிசல் உயிரிழப்பு 350 ஆனது; இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை- ஹஜ் கமிட்டி தகவல்!

539
0
SHARE
Ad

24-1443089079-mecca-mina-600சவுதி அரேபியா – புனித மெக்கா அருகேயுள்ள மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

புனித மெக்கா அருகே உள்ள மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டனர்.

அப்போது திடீரென அங்கே கூட்டநெரிசல் ஏற்பட்டு 350 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தாண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் மெக்காவிற்குப் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் தமிழர்கள் 2,773 பேர் ஆவர்.

அவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்