சானா – ஏமன் தலைநகர் சானாவில் உள்ள மசூதி ஒன்றில் இன்று பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நடந்த தொழுகையின் போது, தொடர் குண்டுகள் வெடித்ததில் 29 பேர் பலியாகினர்.
ஏமனில் கவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியா கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஏமன் தலைநகர் சானாவின் அல் பிலாலி என்ற இடத்தில் உள்ள மசூதியில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தப்பட்ட போது,
திடீரெனக் கூட்டத்துக்கு நடுவே பயங்கர சப்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின.
இதில் 29 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் கடந்த 3 மாதங்களில் 6-ஆவது முறையாக இக்குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.