அந்த வகையில்தான், தற்போது அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப்பும் இந்த தங்கும் விடுதியில், அதுவும் ஒரே மாடியில் தங்கியுள்ளனராம்.
இருநாட்டு தூதரக உறவுகளில் ஏற்பட்ட தகராறுகளின் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையில் எல்லா நிலைகளிலும் சந்திப்பு தற்போதைக்கு இல்லை என்ற முடிவை இரு நாட்டு அரசாங்கங்களும் எடுத்துள்ளன.
இந்நிலையில், மோடியும் நவாஸ் ஷெரிப்பும் மரியாதை நிமித்தம் சந்திப்பு ஏதும் நடத்துவார்களா என்பதை அறிந்து கொள்ள தகவல் ஊடகங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.