Home Featured நாடு தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியர் உட்பட மூவர் கைது!

தீவிரவாத அச்சுறுத்தல்: மலேசியர் உட்பட மூவர் கைது!

565
0
SHARE
Ad

Datuk Seri Noor Rashid Ibrahimகோலாலம்பூர் – தலைநகரில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபர்கள் மூன்று பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அந்த மூவரில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் இந்தோனேசியர் அவர்களோடு மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக துணை தேசிய காவல்படைத் தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரசீத் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களோடு, புக்கிட் அம்மான் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது” என்று நூர் ரசீத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

Comments