Home Featured தொழில் நுட்பம் வீசேட் செயலியால் ஐபோன்களுக்கு ஆபத்து – ஒப்புக்கொண்ட ஆப்பிள்!

வீசேட் செயலியால் ஐபோன்களுக்கு ஆபத்து – ஒப்புக்கொண்ட ஆப்பிள்!

518
0
SHARE
Ad

appsஆப்பிள் நிறுவனம் முடக்கி உள்ள செயலிகள்

கோலாலம்பூர் – ஆப்பிளின் புதிய வெளியீட்டினை முடக்கும் வகையில் ‘எக்ஸ்கோட்கோஸ்ட்’ (XcodeGhost) என்ற மால்வேர், ஆப் ஸ்டோரில் பரப்பப்பட்டுள்ள நிலையில், ‘வீசேட்’ (Wechat) போன்ற பிரபல செயலிகளின் வாயிலாக அந்த மால்வேர், ஆப்பிள் கருவிகளில் புகுத்தப்படுவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அதனை ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”ஆப் ஸ்டோரை மால்வேரில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள புதிய செயலிகள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, ஆப்பிள் நிறுவனம் வீசேட் உள்ளிட்ட 25 செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. மால்வேர்களை நீக்கும்படியான புதிய மேம்பாடுகள் வெளியாகும் வரை அவற்றை ஐபோன் பயனர்கள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.