Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்திய மூவர்ணக் கொடி வண்ணங்களுடன் முகப்புப் படம்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்திய மூவர்ணக் கொடி வண்ணங்களுடன் முகப்புப் படம்!

1137
0
SHARE
Ad

Mark Zuckerberg - profile pic - indian coloursசான் ஜோசே – அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  அங்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு, அங்கு நடைபெறும் ‘டவுன் ஹால் மீட்டிங்’ எனப்படும் கேள்வி பதில் கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணி முதல் பேஸ்புக் அகப்பக்கத்தில் மோடியின் கலந்துரையாடல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடைபெறவிருக்கும் மோடியின் பேஸ்புக் வருகையை முன்னிட்டி, மார்க் சக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தின் முகப்புப் படத்தை (profile picture) இந்தியக் கொடியில் காணப்படும் மூவர்ணத்துடன் மாற்றியமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தைத்தான் மேலே காண்கிறீர்கள்.

மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள மார்க் சக்கர்பெர்க் அதன்காரணமாகத்தான் தனது முகப்புப் படத்தை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியக் கிராமப் புறங்களை இணையம் மூலம் இணைக்கவும், இணையம் வழி நேரடியாக மேலும் பல சேவைகளை மக்களுக்கு வழங்கவும், இந்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டத்திற்கு தனது ஆதரவு உண்டு என்றும் கூறியுள்ள சக்கர்பெர்க், மோடியுடனான சந்திப்பை பெரிதும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு:-

“I changed my profile picture to support Digital India, the Indian government’s effort to connect rural communities to the internet and give people access to more services online. Looking forward to discussing this with Prime Minister Narendra Modi at Facebook today. Show your support for Digital India atfb.com/supportdigitalindia