Home தொழில் நுட்பம் நட்பு ஊடகங்களை புகழ்ந்து தள்ளிய மோடி!

நட்பு ஊடகங்களை புகழ்ந்து தள்ளிய மோடி!

550
0
SHARE
Ad

modi-in-us_சான் ஜோசே – உலக அளவில் பெரும்பாலான தலைவர்கள் நட்பு ஊடகங்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை கூறி வரும் நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, ‘டிஜிட்டல் இந்தியா’ நிகழ்வின் போது தனது உரையில் அனைத்து நட்பு ஊடகங்களையும் பாராட்டியுள்ளார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:-

”இங்கு கூடி இருக்கும் பலரையும்  நான் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். பேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் அது தான் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாக இருந்திருக்கும்.”

#TamilSchoolmychoice

“டுவிட்டரோ அதன் பயனர்களை செய்தியாளர்களாக மாற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ள இந்த காலக்கட்டத்தில் ஒருவர் விழித்திருக்கிறாரா? அல்லது உறங்குகிறாரா?  என்பதை விட இணையத்தில் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றனர்.”

“சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இளம் வாலிபர், இந்தியாவில் உள்ள உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியுடன் ஸ்கைப் மூலம் தினமும் பேசுகிறார். பெண் குழந்தைகளின் மகத்துவத்தை உணர்த்த தந்தை மகளுடனான தம்படத்தை (செல்ஃபி) அறிமுகப்படுத்தினேன். இவைஅனைத்துமே நீங்கள் (நட்பு ஊடகங்கள்) செய்யும் பணியால் தான் சாத்தியமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சு தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை பெரிதும் கவர்ந்தது.