Home Photo News நரேந்திர மோடி அமெரிக்க வருகை – படக் காட்சிகள்

நரேந்திர மோடி அமெரிக்க வருகை – படக் காட்சிகள்

1039
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அமெரிக்கா நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவ் காந்தி இதே போன்று விமானத்தில் பறந்தபோது மடிக் கணினியைப் பயன்படுத்திய புகைப்படம் ஒன்றை சில இணையவாசிகள் பகிர்ந்து கொண்டு மோடியைக் கிண்டலடித்தனர் என்பது வேறு விஷயம்.

#TamilSchoolmychoice

அமெரிக்கா சென்றடைந்ததும் முதலில் துணையதிபர் கமலா ஹாரிசையும், அவரின் குழுவினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் மோடி.

அதைத் தொடர்ந்து ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகாவையும் அவரின் குழுவினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் மோடி.

நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த மோடி, தொடர்ந்து குவாட் எனப்படும் நான்கு நாடுகளின் கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் இந்த சந்திப்புகளையெல்லாம் நடத்தி முடித்துவிட்டு நியூயார்க் புறப்பட்டு சென்றுவிட்டார் மோடி.

அங்கு ஐக்கிய நாட்டு மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் நாடு திரும்புவார்.

படங்கள் : நன்றி – நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal