Home Featured தொழில் நுட்பம் மோடியின் பேஸ்புக் கேள்வி பதில் அரங்கம் – உலகம் எங்கிலுமிருந்து 43,000 கேள்விகள்!

மோடியின் பேஸ்புக் கேள்வி பதில் அரங்கம் – உலகம் எங்கிலுமிருந்து 43,000 கேள்விகள்!

771
0
SHARE
Ad

modi1மென்லோ பார்க் – இங்கு அமைந்து பேஸ் புக் தலைமையகத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் இணைந்து இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி நடத்தவிருக்கும் கேள்வி பதில் அரங்கத்தில் அவரிடம் கேட்கப்படுவதற்காக உலகம் எங்கிலும் இருந்து 43,000 கேள்விகள் வந்து குவிந்துள்ளன.

ஒரு குழுவினர் இந்தக் கேள்விகளிலிருந்து சிறந்த கேள்விகளையும், சுவாரசியமான கேள்விகளையும் வடிகட்டித் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர்.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் (மலேசிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை) இந்த கேள்வி பதில் அரங்கம் நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice