Home Featured நாடு சீனத் தூதருக்கு விஸ்மா புத்ரா அழைப்பு: விளக்கம் கோர முடிவு!

சீனத் தூதருக்கு விஸ்மா புத்ரா அழைப்பு: விளக்கம் கோர முடிவு!

630
0
SHARE
Ad

Chinese Ambassaor-Huang Huikang-புத்ராஜெயா- பெட்டாலிங் ஸ்ட்ரீட் சென்றபோது அங்கு தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் கோருவதற்காக மலேசியாவுக்கான சீனத் தூதர் டாக்டர் ஹுவாங் ஹுய்காங்குக்கு விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு அலுவலகம்) அழைப்பு விடுத்துள்ளது.

இந்தச் சந்திப்பானது திங்கட்கிழமையன்று விஸ்மா புத்ராவில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெட்டாலிங் ஸ்ட்ரீட் சென்றபோது அவரை (தூதர் ஹுவாங்) செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். இதையடுத்து வெளியான ஊடக அறிக்கைகள் மலேசிய மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெறும் சந்திப்பானது இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்த உதவும் என வெளியுறவு அமைச்சு நம்புகிறது” என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டுவோரை சீனா கண்டிப்பதாக டாக்டர் ஹுவாங் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற பேரணியைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

“இனங்களுக்கெதிரான தீவிரவாதப் போக்கை சீன அரசு கடுமையாக எதிர்க்கும். மலேசிய, சீன உறவுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக பெய்ஜிங் குரல் எழுப்ப தயங்காது” என்றும் தூதர் ஹுவாங் மேலும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் விஸ்மா புத்ராவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.