Home Featured நாடு விடுவிக்கப்பட்டார் ஜமால்: ஊடகங்கள் மீது பாய்ச்சல்

விடுவிக்கப்பட்டார் ஜமால்: ஊடகங்கள் மீது பாய்ச்சல்

967
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் மீண்டும் ஒரு சிவப்பு சட்டை பேரணி நடைபெறும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தால் தடுத்து வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரணி தொடர்பான தனது கூற்றை ஊடகங்கள் பரபரப்பான ஒன்றாக்கி விட்டதாக சாடினார். மேலும் பக்காத்தானுக்கு ஆதரவான அத்தகைய ஊடகங்கள் மீது வழக்கு தொடரப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“இது நியாயமற்ற செயல். எனவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன். எந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்பட்டன என்பது குறித்து எனது வழக்கறிஞர் ஆராய்வார். ஊடகங்களே நான் கைது செய்யப்பட காரணம்” என்றார் ஜமால்.

#TamilSchoolmychoice

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறையின் கோலாலம்பூர் தலைமைத் துணை ஆணையர் டத்தோ லா ஹோங் சூன், சனிக்கிழமை மாலை ஜமால் விடுவிக்கப்படலாம் என்று கூறியிருந்தார்.

சனிக்கிழமை காலை பெட்டாலிங் சாலைக்கு வருகை புரிந்த அவர், தேவையற்ற வதந்திகளை பொது மக்கள் பரப்பக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.  “அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நாங்கள் இருக்கிறோம். எனவே வதந்திகளைப் பரப்பாமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வதந்திகளைப் பரப்புவது குற்றம்” என்றார் லா ஹோங் சூன்.