Home Featured நாடு புகைமூட்டம்: ஹிஷாமுடின் உடல்நிலை பாதிப்பு!

புகைமூட்டம்: ஹிஷாமுடின் உடல்நிலை பாதிப்பு!

745
0
SHARE
Ad

Hishamuddin-Tun-Hussein-Onnகோலாலம்பூர் – புகை மூட்டம் காரணமாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ  ஹிஷாமுடின் உசேனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.

“புகைமூட்டம் பயங்கரமாக உள்ளது (Jerebu masih teruk). ஏற்கெனவே எனது குரல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூக்கடைப்பும் ஏற்பட்டுள்ளது” என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

புகைமூட்டம் தொடர்பாக மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ள அவர், பொதுமக்கள் வெளியே அதிகம் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது மகனுக்கு ஆஸ்துமா (மூச்சிரைப்பு) பிரச்சினை இருப்பதாக கூறியுள்ள ஒருவருக்கு, “எனக்கும் அந்தப் பிரச்சினை உண்டு. உங்கள் மகனை வீட்டுக்குள்ளே வைத்திருங்கள்” என்று ஹிஷாமுடின் அறிவுறுத்தி உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் புகைமூட்டம் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளதால், இந்த விவகாரம் குறித்து வட்டார அளவில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.