Home Featured உலகம் 18,000 பேர் முன்னிலையில் சாப் மையத்தில் உரையை தொடங்கினார் மோடி!

18,000 பேர் முன்னிலையில் சாப் மையத்தில் உரையை தொடங்கினார் மோடி!

871
0
SHARE
Ad

SAP_2563828gசான் ஜோசே – அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகின் முன்னணி நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்று பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக பேஸ்புக் தலைமையகம் மற்றும் கூகுள் தலைமையகத்திற்கு சென்று பார்வையிட்ட மோடி, தற்போது சான் ஜோசேவின் பிரபல சாப் மையத்திற்கு சென்றுள்ளார்.

modi14அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ‘குட் ஈவினிங்’ கலிபோர்னியா என மோடி தனது உரையைத் தொடங்கியவுடன் அரங்கமே அதிரும் அளவிற்கு அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர்.

modisapஅவர், “பகத் சிங் பிறந்தநாளான இன்று உங்களைக் காண வந்துள்ளேன். தனது இளமைக் காலத்தை சுதந்திரத்திற்காக காவு கொடுத்த ஒருவர் எனது நாட்டில் இருந்தார்” என்று அவர் கூறியவுடன் அரங்கத்தில் கூடியிருந்த இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பரித்தனர்.

#TamilSchoolmychoice