Home Featured உலகம் கூகுள் தலைமையகத்தில் மோடியின் நகைச்சுவைப் பேச்சு!

கூகுள் தலைமையகத்தில் மோடியின் நகைச்சுவைப் பேச்சு!

517
0
SHARE
Ad

modi-pichaiசான் ஜோசே – பேஸ்புக் தலைமையகத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு, கூகுள் தலைமையகம் சென்ற இந்தியப் பிரதமர் மோடியை, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அன்புடன் வரவேற்றார். மோடிக்கு, கூகுள் அலுவலகம் முழுவதையும் சுற்றிக் காட்டிய அவர், கூகுள் எர்த் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பற்றியும் அவருக்கு விளக்கிக் கூறினார்.

Modi_Pichai_அதன் பின்னர் மோடி, கூகுள் ஊழியர்கள் உட்பட ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கில் தனது உரையைத் தொடங்கினார். பேஸ்புக் அலுவலகத்தில் நட்பு ஊடகங்களை சிலாகித்துப் பேசிய மோடி, இங்கு நட்பு ஊடகங்களினால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக கேலி செய்தும் பேசினார்.

modi-at-google_அவர், “நேரத்தை சேமிக்கவே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. தொழில்நுட்பங்களிலேயே மக்கள் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். குழந்தை பால் கேட்டால்கூட, வாட்ஸ்சாப்பில் அளவளாவிவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறு என்று கூறும் அளவிற்கு நிலைமை சென்றுவிட்டது” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

அவரின் இந்த பேச்சை அரங்கில் இருந்தவர்கள் ரசித்துக் கேட்டனர்.