Home Featured நாடு மொராயிஸ் வழக்கு: இராணுவ மருத்துவர் உட்பட 8 மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

மொராயிஸ் வழக்கு: இராணுவ மருத்துவர் உட்பட 8 மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

958
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் இராணுவ மருத்துவர் உட்பட 8 பேர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டனர்.

ஜி.குணசேகரன் (வயது 47), ஆர்.தினேஸ்வரன் (வயது 23), தினேஸ் குமார் (வயது 22), எம்.விஸ்வநாத் (வயது 25), எஸ்.நிர்மலன் (வயது 22), எஸ்.ரவிச்சந்திரன் (வயது 44) ஆகிய 6 பேரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

kevin morais0022

#TamilSchoolmychoice

(படம்: நன்றி ஸ்டார் இணையதளம்)

அவர்கள் 6 பேர் மீதும் குற்றவியல் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

அதேவேளையில், அவர்களைக் கொலை செய்யத் தூண்டிய இராணுவ மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன் (வயது 48) மீது குற்றவியல் சட்டம் பிரிவு 109-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சித்தி ரட்சியா கமாருடின், மொராயிசின் பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கைகள் முழுமையடைய வேண்டியிருப்பதால், எதிர்வரும் நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இவர்களைத் தவிர மெக்கானிக் ஒருவரின் மீது கொலை செய்யத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.