Home இந்தியா ஜப்பானிலுள்ள நேதாஜியின் சாம்பலைப் பரிசோதனை செய்க: நேதாஜி மகள் வேண்டுகோள்!

ஜப்பானிலுள்ள நேதாஜியின் சாம்பலைப் பரிசோதனை செய்க: நேதாஜி மகள் வேண்டுகோள்!

673
0
SHARE
Ad

boseகொல்கத்தா – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரது மரணம் தொடர்பாக இன்னமும் மர்மம் நீடித்து வருகிறது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரான நேதாஜி பற்றிய பல்வேறு ஆவணங்கள் மேற்கு வங்காள மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன.

#TamilSchoolmychoice

இதில் மேற்கு வங்காள மாநில அரசிடம் இருந்த 64 ரகசிய ஆவணங்களைக் கடந்த 18-ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் வெளியிட்டார். இந்த ஆவணங்களின் நகல்கள் தற்போது அங்குள்ள காவல்நிலையஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ், மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள 64 ரகசிய ஆவணங்களின் நகல் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், அதனால் அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் அனிதா போஸ் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு வசம் உள்ள ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலவி வரும் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்;இதற்குப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், நேதாஜியின் அஸ்தி என ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.இந்தப் பரிசோதனையின் மூலம் நேதாஜியின் சாவில் உள்ள மர்மம் விலகும் என அவர் நம்புவதாகக் கூறியுள்ளார்.